SRM கல்விக்குழுமங்களில் ஒன்றான SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பா.சிதம்பரராஜன் மற்றும் அக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் க.சண்முகம் அவர்களும் இணைந்து எழுதிய வலை வாசல் வருக புத்தகத்தில் ஒவ்வொரு கணினிஅறிவியிலின் தொழில்நுட்பத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மைச்சார்ந்த, நிகழ்வுகளின் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் தரவுப்பகுப்பாய்வு (Data Analytics), மேகக்கணிமை (Cloud Computing), வலையிணைப்புகணிமை (Grid Computing), தரவுச்செயலாக்கம்(Data Mining), இயற்கைமொழியாய்வு (Natural Language Processing), செயற்கைநுண்ணறிவு (Artificial Intelligence), பொருள்களின்இணையம் (Internet of Things), இளஞ்சித்தரவி (BigData), இயந்திரக்கற்றல் (Machine Learning), படிமச்செயலாக்கம் (Image Processing), மெய்நிகர்த்தோற்றம் (Virtual reality) மற்றும் புனைமெய்யாக்கம் (Augumented Reality), தொடரேடு (Block Chain),மின்வெளிபாதுகாப்பு(Cyber Securtity) மற்றும் தன்னியக்கஇயந்திரம் (Autonomous Machine) மற்றும் இணையாமல் இணையும் இணைய வழிக் கல்வி என இப்போது கணினிதுறையில் உள்ள பல தொழில் நுட்பங்களைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் கல்லூரி மாணவ,மாணவிகளுக்குப் பயன்பெறும் வகையில் தமிழிலில் வெளியிடப்பட்டுள்ளது.